JUNE 10th - JULY 10th
விடியகாலம் ஏலத்தில் எடுத்த மீனெல்லாம் விற்று தீர்ந்ததும் மதியம் மது அருந்திவிட்டு வீட்டுக்கு புறபட்டாள் செண்பகம்.செண்பகம் தன் மகனான ராஜதுரை மீது அலாதி பிரியம் கொண்டவள். துரை செண்பகத்தின் மீது சங்கரையாவை விட அதிகம் அன்பு கொண்டிருந்தான்.ஊர் மண்டபத்தில் பாத்திரங்களை கழுவுவது, சாப்பாட்டு இலைகளை ஒதுக்குவது போன்ற வேலைகளை செய்து வந்தான் சங்கரையா.சாப்பாட்டு இலைகளில் இருக்கும் சாப்பாட்டை தனியாகவும், இலைகளை தனியாகவும் ஒதுக்கி, வெளியில் காத்து இருக்கும் காகங்களுக்கும் , நாய்களுக்கும் பெரிய விருந்தே நடத்துவான்.சங்கரையா மீது நாய்களுக்கு மட்டும் பிரியம் அதிகம். வீட்டுக்கு கொண்டு போக கொஞ்ச கொஞ்சமா மிச்சம் வருகிற பிரியாணி ,நெய்ச்சோறு ,புரோட்டா ,குழம்பு ,பொரிச்ச இறைச்சி எதுனாலும் ராஜதுரைக்கு தனியாக ஒரு கவரில் இருக்கும்.சங்கரையா கொண்டு வந்த சாப்பாட தட்டுல கொட்டி விரவி, உருண்டை பிடிச்சு ராஜதுரைக்கு ஊட்டுவாள் செண்பகம். அதை சாப்பிடும் போது வருகிற ருசி கண்ண மயக்கி, உடல் முழுக்க ருசி பரவுற மாதிரி இருக்கும். ஆனா, எல்லா நேரமும் அதே ருசி இருக்குறது இல்லை.சில நேரம் கொஞ்சம் மது மணமும் , சில நேரங்களில் அந்த பிரியாணியில் செண்பகத்தின் கண்ணீரும் கலந்து இருக்கும்.செண்பகமும் மதுவும் இணை பிரியாதவர்களாக இருந்தனர். அவ்வப்போது கண்ணீரும் அவர்களுக்கிடையில் கலந்து கொள்ளும்.
சாப்பாடு அள்ளி துரைக்கு கொடுத்துக்கொண்டு இருக்கும்போது செண்பகத்தின் கண்கள் கலங்கி கொண்டு இருந்தது.
அம்மா ஏன் அழுற...?
ஒண்ணுமில்லடா...
அப்பா ஏசுச்சா...?
இல்லை மொவன் , நீ சாப்டு...
நீ குடிக்கிறனு வெளிய எதாது சொன்னாங்களா...?
இல்லடா...என்றாள்.
செண்பகமும் ராஜதுரையும் பேசி கொண்டு இருந்ததை சங்கரையா, கேட்டும் பேசாமல் படுத்திருந்தான்.செண்பகம் ராஜதுரையை அவளுக்கு பக்கத்திலே உறக்க கிடத்தினாள்.
ஒரு மதிய நேரம் சங்கரையா துரையிடம்...டேய் துரை , இன்னைக்கு என்ன சாப்பாடு போடுராங்கனு தெரியலடா, சாயங்காலம் அப்பா வரும்போது கொண்டு வாரேன்டா என்றார். துரை மதியமே வயிற்றை காலி செய்து, சங்கரையா கொண்டு வரும் உணவுக்காக காத்திருந்தான்.நேரம் ஆகஆக சங்கரையா வீட்டுக்கு வரவில்லை.டேய் துரை என்னனு ஒன்னு போய் பாத்துட்டு வாடா , வர லேட் ஆகும்னா சாப்பாட வாங்கிட்டு வந்திடு என்றாள் செண்பகம்.துரை மண்டபத்தை நோக்கி விரைந்தான்.வாயிற்கதவில் உள்பக்கமாக கொண்டி இடப்பட்டிருந்ததால் மதிற்சுவரைத் தாண்டி உள்ளே குதித்தான்.அங்கிருந்த தூணோடு ஒரு பெண் சாய்ந்திருப்பதைக் கண்டு, அவள் அருகே சென்றான். கற்சிலை நிறத்தில் இருந்த அவள் அசையாமல் இருக்க கண்டான். அவள் கன்னத்தின் மீது கை வைத்து மெதுவாக வருடினான். கருத்த கன்னமும் அழகாகத் தான் இருக்கிறது என்றான். மெதுவாக கையெடுத்து அவள் விழிகளை தொட்டதும் அவள் விழித்து கொண்டாள். நீ யாரு...? என்றாள். துரையின் காதுகளுக்கு எதுவும் எட்டவில்லை. அவன் கண்களில் மூடிய கண்களும் , கன்னமும் மாறிமாறி வந்துப் போனது. அவள் கொஞ்சம் சத்தம் அதிகப்படுத்தி நீ யாரு , எதுக்கு என்னைத் தொட்ட? என்றாள். கருத்த முகமும் கோவப்பட்டால் சிவக்கும் என்று அப்போது துரை தெரிந்துக்கொண்டான்.அவள் இது கோபமோ, பயமோ என்ன என்று தெரியாமல் எதுக்கு என்னைத் தொட்ட? என்று மறுபடியும் கத்தினாள். உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவுத் திறந்து, செல்வி அக்கா தலைமுடியை கெட்டிக்கிட்டே ஓடி வந்தாள்.தும்பி என்னடி ஆச்சு.என்னை தொட்டுடான் அம்மா என்றாள். செல்வி துரையோட கன்னத்துல ஓங்கி ஒரு அறைவிட்டாள்.செல்வியை துரை பார்த்து இருக்கிறான் தவிர அவளைப்பற்றி வேறேதும் அறிந்திருக்கவில்லை.செல்வி வந்த கதவு வழியாக சங்கரையா வந்து , செல்வி நிறுத்து, என்ன பண்ற நீ... என்றார். துரையைப் பார்த்து என்னடா ஆச்சு? என்றார்.அவ கன்னத்தை தொட்டேன், அதுக்கு இவங்க அடிச்சாங்க அப்பா... என்றான். சரிடா என் ராஜா.., இங்க வா... என்று அழைத்து ஏன் இங்க வந்த என்றார்.அம்மா சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்லுச்சு. சரி , என்று அவனை அழைத்து சமையலறையிலிருந்த கவரை எடுத்துக்கொடுத்து, வீட்டுக்கு போய் சாப்டு , அப்பா பாத்துக்குறேன் என்றார்.
சங்கரையா செல்வியிடம் , கன்னத்தை தொட்டதுக்கா அவனை அடிச்ச? என்று கேட்டார்.ஒரு பொண்ணு தனியா இருந்தா அவளை தொடுறதாக்கும், கன்னமா இருந்தாலும் அவ இஷ்டப்பட்டாதான் தொடனும் சங்கரையா, என்றாள் செல்வி.இங்க நடந்த எதையும் மனசுல வச்சிக்காத பாப்பா. நீ சித்தி வீட்டுக்கு போ... நான் பின்னாலே வந்துடுறேன் தும்பி என்றாள் செல்வி.பின்பு, கொஞ்சம் நேரம் கழித்து சங்கரையாவிடம் எதோ கோவத்துல அடிச்சிட்டேன் என்று வருத்தம் தெரிவித்துக்கொண்டாள்.
துரை சாப்டிட்டு இருக்கும்போது, நான் என்ன பண்ணேன், எதுக்கு என்னை அடிச்சாங்க? எனக்கு கேக்கணும்... அவங்க மூணு பேரு கிட்டையும் கேக்கணும். சாப்ட்டு முடிச்சு அம்மாவைப் பார்த்தான். ரூமில் மது மணம் இன்னும் நீங்கவில்லை. துரை அவங்க மூணு பேரு கிட்ட என்னெல்லாம் கேக்கணும்னு என்று நினைத்துக்கொண்டு, அந்த தும்பி ஒன்னும் லேசுப்பட்ட ஆளு இல்லை... என்று தனக்குத்தானே சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் மண்டபம் வந்து சேர்ந்தான்.வாயிற்கதவு பூட்டியிருந்ததால் மதிற்சுவர் தாண்டி உள்ளே குதித்தான். உள்ளே தும்பி இல்லை.மண்டபத்தின் கதவுகளெல்லாம் அடைக்கப்பட்டு இருந்தது.என்ன செய்யலாம் என்று யோசிக்கவே செல்வி அக்கா வந்த கதவு நியாபகம் வந்தது.அந்த கதவை இழுத்தான்.அது சாத்திவைக்கப்பட்டிருந்ததால் உடனே திறந்தது.திறந்த கதவில், தான் நுழைவதற்கு முன்பே சூரிய ஒளி உள்புகுந்து நான்கு கால்களை காட்டியது. ஒளிப் பரவ கால்கள் பென்ஞ்சுகளுக்கிடையே மறைந்து கொண்டது.அதன் பக்கத்திலிருந்த ஜன்னலில் ஒரு சாரமும், ஒரு சேலையும் சொருகப்பட்டும், கீழே தரையில் கிடந்த கொலுசு ஒன்று, சூரிய ஒளிப்பட்டு தகதகத்துக் கொண்டும் இருந்தது.கதவை அடைத்து வெளியே நின்று கொண்டான் துரை. சங்கரையா அந்த கதவை திறந்து வெளியே வரவே துரை கதவைத் திறந்து உள்ளே சென்று , செல்வியக்கா கன்னத்தில் துள்ளி ஒரு அறை விட்டான்.
கோபமும் , வெறுப்புமாய் வீட்டுக்கு வந்த துரை செண்பகத்தை பார்த்ததும் அழுதுவிட்டான். மண்டபத்துல வேலைப் பாக்குற செல்வி அக்காவை அடிச்சிட்டேன் அம்மா என்று மனம் நொந்துக்கொண்டான்.துரை... ஐயா துரை... என்ன ஆச்சு? ஏன்டா அழுற? ஐயோ, அழாதடா என்றாள் செண்பகம். கண்களில், இருளில் மறைந்த கால்களும், ஜன்னலில் இருந்த சாரமும் சேலையும் வந்து வந்து போனது. துரை அம்மாகிட்ட நடந்ததை விளக்கினான். செண்பகமும் இப்போது அழுதாள்.
ஏன் அம்மா இப்படி அவரு பண்ணாரு? செண்பகம் துரையின் தலையை, தடவி கொடுத்துக்கொண்டே இருந்தாள்.செண்பகம், அவரு எந்த தப்பும் பண்ணலடா...என்றாள். என்னம்மா நீ பேசுற. ஆமாடா அவரு நல்ல மனுஷன் என்றாள். அவனால் நிம்மதியாக எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கவே முடியவில்லை. வெளிச்சமும் இல்லாத , இருட்டும் இல்லாத பொழுதில் சங்கரையா வீடு வந்து சேர்ந்தார்.அவன் தோள்மேல் கைப்போட்டு ஆத்துல குளிக்கப் போமா என்றார். இருவருமாக நடந்து கொண்டிருக்கையில், எதுக்கு இப்படி பண்ணிங்க என்றான். நாங்க விருப்பத்தோட பண்ணோம்.நான் அவங்களையும் விரும்புறேன்.அவளும் என்னை விரும்புறா என்றான் சங்கரையா. அப்போ, ஒருத்தங்கள கெட்டிக்கிட்டு குழந்தை பெத்துக்கிட்டு அப்புறமும் இன்னொருத்தங்கள விரும்பலாமா? என்றான் துரை. சங்கரையா , ஆமா என்றார்.அப்போ விரும்புனா இப்படியும் அவங்க கூட இருக்கலாமா? இது எப்படி அப்பா, இது தப்பு, தப்பில்லையா? என்றான். மனுசங்க அவங்க அவங்க தேவைக்காக தானே பல கட்டுப்பாடு கொண்டு வந்தாங்க. நாங்க ஒருத்தருக்கொருத்தர் விரும்புனோம். அம்மாவை எப்படி விரும்புறேனோ அது போல தான். இந்த கட்டுப்பாடெல்லாம் நீக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி நாங்க எங்களையும் எங்க உணர்வுகளையும் முழு விருப்பத்தோட பகிர்கிறோம் என்றார் சங்கரையா. இது தும்பிக்கு தெரியுமா? என்றான் துரை. இல்லை என்றார்.அப்படினா, என்னை மாதிரி இருக்குற பையனோட வீட்லையோ, தும்பி மாதிரி இருக்குற ஒரு பொண்ணோட வீட்லையோ நீங்க காட்டுற முகம் வேறயா? இது தெரியாத வரைக்கும், எல்லாருக்கும் அவங்க அம்மா அப்பா உத்தமம் தான்ல.இந்த மாதிரி எங்கையோ யாரோ செய்றது , யாரோ ஒருத்தங்களோட அம்மா அப்பா இல்லைனா நம்ம கூட நடக்குற பேசுற யாரோ தான்ல. துறை நான் சொல்றது உனக்கு புரியலை என்றார் சங்கரையா.சுதந்திரம் என்பது எந்த கட்டுப்பாடுகளுமின்றி, மனிதன் வரையறுத்த விதிகளை கிழித்து எறிந்து யாருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வது என்றார். ஆறு வந்தது. இருவரும் ஆற்றில் குதித்தனர்.குளித்துக்கொண்டு இருக்கும்போது துரை கேட்டான், அப்போ.. எனக்கு ஒரு தங்கச்சியிருந்து நாங்க ரெண்டு பேரும் முழுசா விரும்பி, நாங்க இப்படிப் பண்ணா ஏத்துபிங்களா ? என்றான்.
#67
49,723
6,390
: 43,333
130
4.9 (130 )
aswinmano9302
nishanth16info
jenishajenisha52
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50